Mithuna / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ள ஒரு படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து ’தளபதி 69’படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் சோகத்தில் உள்ளனர்.

இந் நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’தலைவர் 171’ படத்தை முடித்துவிட்டு ’விக்ரம் 2’ மற்றும் ’கைதி 2’ ஆகிய படங்களை இயக்க இருப்பதாக தெரிகிறது.
இந் நிலையில், விஜய்யை வைத்து அவர் ’லியோ’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே ’விக்ரம் 2’ மற்றும் ’கைதி 2’ படங்களில் விஜய் சிறப்பு காட்சிகளில் தோன்றும் காட்சிகளை எடுத்து விட்டதாகவும் அந்த காட்சிகளுக்கான டப்பிங் பணியையும் விஜய் முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே ’தளபதி 69’ படத்திற்கு பின்னர் ’விக்ரம் 2’ மற்றும் ’கைதி 2’ஆகிய இரண்டு படங்களில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்த காட்சிகள் வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .