2025 மே 05, திங்கட்கிழமை

விஜய் - சூர்யா திடீர் சந்திப்பு

Niroshini   / 2021 நவம்பர் 10 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை - பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் விஜய் -சூர்யா இருவரும் திடீரென சந்திந்துக் கொண்டனர்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

சென்னை - பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதே சன் ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது.

இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால், இரண்டு படங்களில் படப்பிடிப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், படப்பிடிப்பு இடைவேளையில், விஜய் - சூர்யா இருவரும் நட்பு ரீதியாக சந்தித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X