2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விடுதலை 2 தாமதம் காரணம் இது தான்

Mithuna   / 2023 டிசெம்பர் 19 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில்சூரி, விஜய்சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்த மார்ச் 31ஆம் திகதி வெளியான விடுதலை படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விடுதலை 2 தாமதமாக என்ன காரணம் என்று இயக்குநர் வெற்றிமாறன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "பனிபொழிவில் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க 100 நாட்கள் முயற்சிசெய்தோம். ஆனாலும் முடியவில்லை. நான் படமாக்கும் விதத்தை பார்த்தால், நான்கு ஆண்டுகள் ஆனாலும் முடியாது என பிறகு தான் தெரிந்தது.

இதன் காரணமாக செயற்கை பனிபொழிவை உருவாக்கி படமாக்கினோம். இதனால் தான் விடுதலை 2 முடிக்க காலதாமதம் ஆனது," என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X