2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

விண்வெளியில் படக்குழு சாதனை

J.A. George   / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொலிவுட்டில் விண்வெளியை மையமாக வைத்து கிராவிட்டி, இன்டர்ஸ்டெல்லர் போன்ற பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. முதன் முறையாக விண்வெளிக்கே சென்று ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் ரஷ்ய படக்குழுவினர்.

கிலிம் ஷிபென்கோ இயக்கும் இந்தத் திரைப்படத்தின் கதைப்படி ஆய்வுக்காக விண்வெளிக்குச் செல்லும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவருக்கு இதயப் பிரச்சினை ஏற்பட்டு விடுகிறது.

அவரை காப்பாற்ற பூமியிலிருந்து ஒரு மருத்துவர் செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் தான் திரைப்படத்தின் கதை. திரைப்படத்துக்கு ‘தி சேலஞ்’என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்புக்காக நடிகை யுலியா பெரெசில்ட், இயக்குநர் கிளிம் ஷிப்பென்கோ மற்றும் அவர்களின் உதவிக்காக விண்வெளி வீரர் அன்டன் ஷகாப்லெரோவ் ஆகியோர் கடந்த 5ஆம் திகதி கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் நகரில் இருந்து ‘சோயுஸ் எம்.எஸ்-19’ விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திட்டமிட்டபடி 12 நாட்களில் விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தி முடித்த திரைப்படக்குழு, நேற்று முன்தினம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். இதன் மூலம் விண்வெளியில் திரைப்படம் எடுத்த உலகின் முதல் நாடாக ரஷ்யா வரலாற்று சாதனை படைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X