Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 நவம்பர் 02 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக காலமானான நிலையில் அவருடைய பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக பிரபல தமிழ் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
விஷால், ஆர்யா நடித்த ’எனிமி’என்ற திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் நிகழ்ச்சியில் விஷால் பேசியபோது, ‘புனித் ராஜ்குமார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி தனக்கு ஒரு நல்ல நண்பர் என்றும் அவரைப் போன்ற ஒரு எளிமையான சூப்பர்ஸ்டாரை நான் பார்த்ததில்லை” என்று கூறினார்.
மேலும் புனித் ராஜ்குமார் 1800 மாணவர்களின் படிப்பு செலவினை ஏற்று வந்த நிலையில், அவரின் மறைவினை அடுத்து அந்த 1800 மாணவர்களின் பாடசாலை கல்வி இனி என்னுடைய பொறுப்பு என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
புனித் ராஜ்குமார் உதவியால் படித்து வரும் பாடசாலை மாணவர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கேள்வி எழுந்த நிலையில், விஷால் அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறன.
27 minute ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
26 Aug 2025