2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விஷாலுக்கு என்ன ஆச்சு..?

Janu   / 2025 ஜனவரி 06 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா திரைப்படம் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஷால், கைகள் நடுக்கத்துடன், தடுமாற்றத்துடன் பேசும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆனது என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விஷால் முழுமையாக பேசி முடித்தவுடன், நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி “விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் எனவும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு கடும் காய்ச்சலுடனே வந்துள்ளார்” எனவும் தெரிவித்துள்ளார் .

விஷால் கை நடுக்கத்துடன் பேசும் காணொளி இணையத்தில் பெரும் வைரலானது. பலரும் விஷால் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விழைவு தெரிவித்து வருகிறார்கள்.

விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X