2025 நவம்பர் 05, புதன்கிழமை

வேல் குத்திய சுருதிஹாசன்

Freelancer   / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுருதிஹாசன்,  தனக்கு  ஆன்மிக  ஈடுபாடு  அதிகம்  என்றும் முருக கடவுள் தனது இஷ்ட தெய்வம்  என்றும்  அடிக்கடி பேசி  வருகிறார்.  இந்த  நிலையில் தனது உடலில்  முருக  கடவுள்  கையில் வைத்திருக்கும்  வேலை  பச்சைக்குத்திக் கொண்ட  புகைப்படத்தை  வலைத்தளத்தில்  பகிர்ந்துள்ளார்.

அதில் , "எனக்கு  ஆன்மிகத்தில்  எப்போதும்  ஈடுபாடு  உண்டு . முருக  பெருமானின்  வேலுக்கும்  என்  இதயத்தில்  எப்போதும்  தனி  இடம்  இருக்கிறது. வேல்  பச்சை  குத்தியதன்  மூலம்  எனது  பக்தியை  வெளிப்படுத்த விரும்புகிறேன்.  பச்சைக்குத்துவது  என்பது  எனது  வழக்கமான பழக்க வழக்கங்களில்  ஒன்று.

தற்போது  ஆன்மிகத்தில்  தொடர்புடைய  பச்சை  குத்த  வேண்டும்  என்று  கருதி வேல்  பச்சை  குத்திக்கொண்டேன்''  என்றார்.  சுருதிஹாசன்  வேல் பச்சைக் குத்திக்கொண்ட  புகைப்படம்  வலைத்தளத்தில்  வைரலாகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X