2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வைரலாகும் கங்குவா போஸ்டர்

Mithuna   / 2024 ஜனவரி 16 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3D முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் நடிகர் சூர்யா 'கங்குவா' திரைப்படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்ததாக அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து 'கங்குவா' படத்தின் புதிய போஸ்டர் திங்கட்கிழமை (15)  வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் சூர்யா இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X