2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

விஜய் - அஜீத்துடன் களமிறங்குவாரா வெங்கட்?

George   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சென்னை 600028' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட்பிரபு, தற்போது அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டார்.

இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தனது அடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்களை அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

'சென்னை 28' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் போல 'மங்காத்தா 2' இரண்டாம் பாகத்தை உருவாக்க ரசிகர்களை போலவே எனக்கும் ஆசை உள்ளது.

அது 'மங்காத்தா' திரைப்படத்தின் தொடர்ச்சியா? அல்லது முற்றிலும் வேறு கதையா? என்பதை விரைவில் முடிவு செய்யவுள்ளேன்.

அதேபோல் எனக்கு விஜய்யை வைத்து கேஷுவலாக - ஜொலியாக ஒரு திரைப்படம் இயக்கணும்ன்னு ரொம்ப நாள் ஆசை. இவை இரண்டும் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது பேட்டியில் 'பில்லா 2' திரைப்படத்துக்கான ஐடியா கிடைத்துள்ளது. சிம்புவுடன் இணைந்து 2018ல் இந்த திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன்' என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X