2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷாவும் நயனும்

George   / 2015 நவம்பர் 03 , பி.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானும் ரௌடிதான் திரைப்படத்தை தொடர்நது விஜய் சேதுபதி, மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேர போகின்றாராம். அதுமட்டுமில்லாமல் இந்தத் திரைப்படத்தில் தரிஷாவும் நடிக்கவுள்ளாராம்.

விஜயசேதுபதி சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்தபோது நயன்தாரா முன்னணி நாயகி. அதனால் தான் ஹீரோவான பிறகு அவருடன் டூயட் பாட வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தபோதும், ஒருவேளை அவர் மறுத்து விட்டால் என்ன செய்வது என்று அந்த ஆசையை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தார் விஜயசேதுபதி. 

ஆனால், நானும் ரௌடிதான் திரைப்படத்துக்கு விஜயசேதுபதியை ஒப்பந்தம் பண்ணுவதற்கு முன்பே நயன்தாராவைதான் ஒப்பந்தம் செய்திருந்தார் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ். 

அதனையடுத்து, நயன்தாரா நாயகி என்றதும் மறுபேச்சு பேசாமல் கமிட்டாகி விட்டார் விஜய் சேதுபதி. அப்படி அவர்கள் நடித்தத் திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி விட்டது. விளைவு, இப்போது அனைத்து மேல்தட்டு ஹீரோயின்களும் விஜயசேதுபதியுடன் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர். 

தற்போது, இன்னொரு திரைப்படத்தில் மீண்டும் விஜயசேதுபதி- நயன்தாரா இணைந்துள்ளனர். நானும் ரௌடிதான் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ்சிவன் அந்தத் திரைப்படத்தை இயக்குகிறாராம். ஆக, நானும் ரௌடிதான் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையப்போகிறது. 

மேலும், இந்தத் திரைப்படத்தில் இன்னொரு நாயகியாக த்ரிஷாவும் நடிக்கிறாராம். இதுவரை நயன்தாரா- த்ரிஷா ஆகிய இருவரும் கடும் தொழில் போட்டியாளர்களாக இருந்து வந்தவர்கள். அண்மையில்தான் அவர்களுக்கிடையே நட்பு வளரத் தொடங்கியிருக்கிறது. அதோடு, த்ரிஷாவை முன்னணி ஹீரோக்கள் கண்டுகொள்ளாத நிலையும் உருவாகியிருக்கிறது. அதனால், இரண்டு நாயகிகளில் ஒருவர் என்றபோதும், இந்த வாய்ப்பு அவரைத் தேடிச்சென்றதும் உடனே ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X