Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகத்தில் சிம்புவை போல அதிகமாக அடிவாங்கியவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். போகிற போக்கைப் பார்த்தால் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்துள்ள இது நம்ம ஆளு திரைப்படமும் வாலு போல நீண்டு கொண்டே போகும் போலத்தான் தெரிகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இது நம்ம ஆளு திரைப்படம் ஆரம்பமான போது சிம்புவிடம் போய் சிக்குகிறாரே பாண்டிராஜ் என நினைத்தவர்கள்தான் அதிகம். அதையெல்லாம் மாற்றிக் காட்டுகிறேன் என சவால் விடாத குறையாக சிம்புவை வைத்து திரைப்படம் இயக்க ஆரம்பித்தவர்தான் பாண்டிராஜ்.
ஒரு கட்டத்தில்தான் சிம்புவை மாற்றவே முடியாது என அவர் உணர்ந்து கொண்டார். எப்படியோ ஒரு வழியாக திரைப்படத்தை முடித்துவிட்டார் பாண்டிராஜ்.ஆனால், விட்ட குறை தொட்ட குறையாக திரைப்படம் எப்போது வெளிவரும் என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.
நயன்தாரா திரைப்படத்துக்கு மீண்டும் கோல்சீட் கொடுத்தே ஆக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வரை புகாருடன் சென்று விட்டார் திரைப்படத்தின் தயாரிப்பாளரான டி.ஆர்.
இதற்கும் சிம்புவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வேறு அவர் சொல்கிறார். ஆனால், திரைப்படத்தின் இத்தனை தாமதத்துக்கும் காரணம் சிம்புதான் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?.
இருந்தாலும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து நயன்தாரா நடித்தே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். அந்தப் பிரச்சினை முடிந்து, படப்பிடிப்பு நடத்தி, திரைப்படத்தை வெளியிட்டு முடிப்பதற்குள் ஆளு, வாலு வாக மாறாமல் இருந்தால் சரி.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago