Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைய தளபதி விஜய்யை மையமாக கொண்டு புதிய அலைபேசி விளையாட்டு ஒன்று அறிமுகமாகியுள்ளது.
நட்சத்திர நடிகர்கள் பெயரில் வீடியோ, அலைபேசி விளையாட்டு வருவது உலகளவில் இன்று சகஜமான போக்காக இருப்பதுடன் ஹொலிவூட், பொலிவூட், கோலிவூட் என எந்தத் திரையுலகும் விதிவிலக்கு இல்லை.
ரஜினிகாந்த், சூர்யா பெயரில் நிறைய வீடியோ விளையாட்டுகள் வந்துள்ளதுடன் நடிகர் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் வெளியான போது புதிய வீடியோ விளையாட்டு வெளியானது.
அதைத் தொடர்ந்து அண்மையில், விஜய்யை மையப்படுத்தி புதிய அலைபேசி விளையாட்டு வெளியாகியுள்ளது.
'எபிக் க்ளாஷ்' (EPIC CLASH) எனும் பெயரில் வெளியாகியுள்ள இந்த 3D விளையாட்டை பதிவிறக்கம் செய்து இப்போதே விளையாடலாம்.
விஜய்க்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த அலைபேசி விளையாட்டை பற்றி அறிந்து வியந்த நடிகர் விஜய், இதை வெளியிட அனுமதி வழங்கியுள்ளாராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2025