George / 2016 ஜூன் 07 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான் ஆகிய இருவரும் 'பிக் பாஸ் 9' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ப்ரமோசனில் நடித்தார்கள்.
கோவில் போன்ற செட்டில் இருவரும் செருப்பு அணிந்து நடித்தனர். இதை எதிர்த்து வழக்கறிஞரான கௌரப் குலாட்டி என்பவர் டெல்லி உயர்நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார்.
‛‛ஷாருக்கானும் சல்மான்கானும் கோவிலுக்குள் சப்பாத்து அணிந்து நடித்ததன் மூலம் இந்து மத உணர்வுகளை அவமதித்து விட்டார்கள். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், பொலிஸார் பதில் மனுவை நேற்று தாக்கல் செய்தனர். அதில் 'ஷாருக்கானும் சல்மான் கானும் சப்பாத்து அணிந்து நடித்து கோவிலில் அல்ல. கோவில் போன்று அமைக்கப்பட்ட செட்டுதான். அதற்கு புனித தன்மை எதுவும் கிடையாது' என்று தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago