R.Tharaniya / 2025 நவம்பர் 26 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பாலிவுட் நடிகை ரகுல் பிரீத் சிங். பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் இந்த ஆண்டு ''மேரி ஹஸ்பண்ட் கி பிவி'' படத்தின் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்தார்.
சமீபத்தில் அஜய் தேவ்கனுடன் ''தேதே பியார் தே 2'' ல் நடித்திருந்தார். ஆர் மாதவன் மற்றும் தபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படம் நல்ல வசூலை பெற்றது.
இவர் தமிழில், தடையறத் தாக்க படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து என்னமோ ஏதோ, தீரன், ஸ்பைடர், தேவ், என்ஜிகே அயலான் மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்நிலையில், "ஸ்பைடர்" தான் தன்னுடைய முதல் பெரிய தோல்வி என்று ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார். அவர் பேசுகையில்,
"ஸ்பைடர்" தான் என்னுடைய முதல் பெரிய தோல்வி. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருடன் நிறைய தெலுங்குப் படங்கள் நடித்திருந்தாலும், 8-10 மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அது என்னை மிகவும் பாதித்தது. உங்கள் எதிர்பார்ப்புகள் தகர்க்கப்படும்போது அது எப்படி இருக்கும் என்பதை நான் முதன்முதலில் உணர்ந்தது ஸ்பைடரில்தான்" என்றார்.



5 minute ago
13 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
48 minute ago