2025 நவம்பர் 26, புதன்கிழமை

300 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெய்யும் மழை தாய்லாந்தை தாக்கியது

R.Tharaniya   / 2025 நவம்பர் 26 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தின் சில பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, வெள்ளத்தால் 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் நிவாரணப் பணிகளுக்கு கொண்டு செல்ல இராணுவக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவிகளை மேற்கொண்டனர்.

கடந்த வாரத்தில் தாய்லாந்து தெற்கில் உள்ள பத்து மாகாணங்கள்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, மலேசியாவின் எல்லையை அண்மித்த வணிக மையமாக ஹாட் யாய் நகரம், 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 335 மில்லிமீற்றர் மழையைப் பதிவு செய்துள்ளது.

நகரத்தில் உள்ள வாகனங்கள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது, இடைவிடாத கன மழை அயல் நாடுகளையும் பாதித்துள்ளது.வியட்நாமில், ஒரு வாரத்தில் இறப்பு எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது,

அதே நேரத்தில் மலேசியாவில், 19,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தாய்லாந்தில்2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்,

ஆனால் 13,000 பேர் மட்டுமே தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டுள்ளனர்.பெரும்பாலானோர்உதவி பெற முடியாத நிலையில் உள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.

நெருக்கடியை சமாளிக்கும் பொறுப்பில் உள்ள தாய்லாந்து இராணுவம்,ஒரு விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட 14 படகுகள் கொண்ட கடற்படையினர்,ஒரு நாளைக்கு 3,000 உணவுகளை வழங்க கூடியதாக கூறப்படும் சமையலறை மூலம் அனுப்பி தயாராகி வருவதாக கூறியுள்ளது.

விமானம் தாங்கிக் கப்பலில் உள்ள மருத்துவக் குழுக்கள் "மிதக்கும் மருத்துவமனையாக" மாற்றும் என்று கடற்படை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X