2025 மே 17, சனிக்கிழமை

ஸ்ரீதிவ்யாவின் உறுதி

George   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம், ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டை உயர்த்தியது. அதையடுத்து, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடித்த காக்கி சட்டை திரைப்படம் தனக்கு இன்னும் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதுதான் ஸ்ரீதிவ்யாவின் நம்பிக்கையாக இருந்தது.

ஆனால், அந்தத் திரைப்படம் எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை. ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டும் சரிந்துபோனது. அதர்வாவுடன் அவர் நடித்து வந்த ஈட்டி திரைப்படமும் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இந்த நிலையில், தற்போது காஷ்மோரா, அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்திக் போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா.

கார்த்தியுடன் நடிக்கும் காஷ்மோரா திரைப்படத்தை இப்போது பெரிதாக எதிர்ப்பார்க்கும் ஸ்ரீதிவ்யா, இதில்; நயன்தாராவும் நடித்திருக்கிறார் என்றாலும், ஸ்ரீதிவ்யாவின் கதாபாத்திரம் இளசுகளுக்கு பிடித்தமானதாக அமைந்துள்ளதாம்.

இதனை தனது அபிமானிகளிடத்தில் கூறி வரும் அவர், நான்கூட முதலில் நயன்தாரா நடிக்கிற திரைப்படத்தில் நடித்தால் நாம் காணாமல் போய்விடுவோமே என்கிற பயத்துடன்தான் அந்த திரைப்படத்தில் ஒப்பந்தமானேன். ஆனால், இப்போதுதான் எனது பாத்திரத்துக்கு கதையுடன் இருக்கும் முக்கியத்துவம் தெரிகிறது.

அதனால், காஷ்மோரா திரைப்படம் தமிழில் எனது மார்க்கெட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி என்கிறார் ஸ்ரீதிவ்யா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .