George / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலைப்பை பார்த்து விட்டு அதிர்ச்சியடையாதீங்க பாஸ்... ராஜபாட்டை திரைப்படத்தில், லட்டு லட்டு ரெண்டு லட்டு... என்ற பாடலுக்கு குத்தாட்டமாடிய ஸ்ரேயா, அதன்பிறகு காணாமல் போய்விட்டார். கார்த்தி நடித்த தோழா திரைப்படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தவருக்கு
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தம் 16 நாட்கள் திண்டுக்கல்லில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஸ்ரேயா, படப்பிடிப்பு முடிந்ததும் மும்பை பறந்து விட்டாராம்.
இந்த திரைப்படத்தில் அப்பா சிம்புவின் மனைவியாக நடித்துள்ள ஸ்ரேயாவுக்கு இரட்டை குழந்தை பிறக்குமாம். அந்த இரண்டு குழந்தைகளும் பின்னர் இரண்டு சிம்புக்களாக நடித்துள்ளார்களாம்.
அந்த வகையில், இரண்டு சிம்புக்களும் குழந்தையாக இருக்கும்போது அவர்களிடம் பாசம் கட்டும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ரேயா, பலமுறை படப்பிடிப்பு தளத்தில் கைதட்டல் வாங்கினாராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .