2025 மே 14, புதன்கிழமை

ஹிந்தியில் வெளியாகிறது அஜீத்தின் வேதாளம்

Administrator   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் திரைப்படத்தை அடுத்து, அஜீத் நடித்த திரைப்படம் வேதாளம். அந்த திரைப்படம் அஜீத்துக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. விளைவு, மீண்டும் அதே சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் தற்போது தனது 57ஆவது திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத்.

இந்த நிலையில், வேதாளம் திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு 14ஆம் திகதி வெளியாகிறது.

ஹிந்தியிலும் வேதாளம் என்ற பெயரிலேயே வெளியாகும் திரைப்படத்தின்  ட்ரெய்லரை அண்மையில் வெளியிட்டனர்.

வடஇந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் வேதாளம் திரைப்படத்தை வெளியிடுகிறார்களாம். அஜீத்துடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்திருப்பதால் விளம்பரங்களில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

இதேவேளை அஜீத், இயக்குநர் ஷங்கர் ஆகிய இருவரும் தங்கள் திரைப்படங்களை முடித்துவிட்டு, ஒரு புதிய திரைப்படத்தில் இணையவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. எனினும் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. அறிவிப்பு வெளியானவுடன் முழுவிவரத்தையும் எதிர்பாருங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .