2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

பூங்குழலியாகிறார் நயன்தாரா

Editorial   / 2019 ஏப்ரல் 05 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிரத்னம் இயக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில், நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில், மணிரத்னம் இறங்கியுள்ளார். அந்தத் திரைப்படத்தில், வந்தியத் தேவனாக கார்த்தியும் குந்தவையாக கீர்த்தியும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடிக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்குமாறு மணிரத்னம் நயன்தாராவிடம் கேட்டுள்ளாராம். இத்திரைப்படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறாராம். லைகா நிறுவனம் தயாரிக்கிறதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்தத் திரைப்படம் உருவாகிறது.

பூங்குழலி முக்கியமான கதாபாத்திரம் தான் என்றாலும் நயன்தாராவுக்கு நந்தினி கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று இரசிகர்கள்  கூறுகிறார்கள். மேலும், குந்தவையாக தயவு செய்து கீர்த்தி சுரேஷைப் போட வேண்டாம் என்று, இரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலரோ பொன்னியின் செல்வன் நாவலை எல்லாம் திரைப்படமாக எடுக்கவே கூடாது. அதை அப்படியே விடுவது தான் நல்லது என்கிறார்கள்.

மணிரத்னம் காரணம் இல்லாமல் நடிகர்கள், நடிகைகளை தேர்வு செய்ய மாட்டார். அப்படி இருந்தும், இந்த திரைப்படத்துக்கான அவரது தேர்வு சரியில்லை என்று, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .