2021 செப்டெம்பர் 25, சனிக்கிழமை

அமலாபாலுக்கு மணிரத்னம் கொடுத்த ஷாக்

Editorial   / 2019 நவம்பர் 10 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிரத்னம் இயக்கயிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு டிசெம்பர் மாதம் முதல் தொடர்ந்து 50 நாட்கள் தாய்லாந்து நாட்டு காடுகளில் நடைபெற உள்ளது. 

இந்த படப்பிடிப்பில் விக்ரம், ஜெயம்ரவி, விஜயசேதுபதி உள்பட பலர் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தில் நடிக்க தன்னை புதுமுக நடிகை போன்று போட்டோ செஷன் நடத்திய மணிரத்னம் தற்போது நிராகரித்து விட்ட தகவலை அறிந்து கடும் அதிர்ச்சியில் இருகுகிறார் நடிகை அமலாபால்.

அதோடு, இவர் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிற செய்தி வெளியானபோது விஜயசேதுபதியுடன் நடிக்கயிருந்த படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். அதன்பிறகுதான் மணிரத்னம் படத்தில் இருந்தும் அவரை நீக்கியிருப்பதாக தெரிகிறது. 

இதனால், ஆடை படம் மெகா பட வாயப்புகளுக்கெல்லாம் வேட்டு வைத்து வருகிறதே என்று கடுமையாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் அமலாபால்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .