Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மே 24 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(22) உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் ஐதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தெலுங்கு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் ஐதராபாத்தில் இருந்து சென்னை தி.நகரில் உள்ள இல்லத்துக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சரத்பாபுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ”சரத்பாபு நடிகர் ஆவதற்கு முன்பே நாங்கள் நல்ல நண்பர்கள். நடிகர் சரத்பாபுவின் மறைவு மிகவும் வேதனையளிக்கிறது. மிகவும் அருமையான மனிதர், நல்ல நண்பர், என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர் சரத்பாபு. நாங்கள் இணைந்து நடித்த அனைத்து படங்களும் ஹிட் படங்கள்' என்று அவர் கூறினார்.
சரத் பாபு ரஜினி காந்துடன் முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
10 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
6 hours ago