2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

கதாநாயகியாக அறிமுகமாகும் அனிகா

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கௌதம் மேனனின்  இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்  அனிகா. இவர் அப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.இதையடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இதுதவிர நானும் ரௌடிதான், மிருதன் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் அனிகா.   

16 வயதான  அனிகா, அண்மைக்காலமாக கதாநாயகிகளுக்கு இணையாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தார்.  இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கப்பேலா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘புட்ட பொம்மா’ என்ற திரைப்படத்தில் அவர்  கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X