2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

திரையுலகில் தொடரும் இழப்பு: மற்றுமொரு பிரபல நடிகர் மரணம்!

J.A. George   / 2023 மார்ச் 27 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாள சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகத் திகழ்ந்த இன்னசென்ட், மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட அவருக்கு உடல் நிலை தொடர்ந்து மோசமாகவே இருந்து வந்தது.

இதையடுத்து புற்றுநோய் தீவிரமடைந்ததால் நடிகர் இன்னசென்ட் நேற்று காலமானார். இவரது மறைவுக்குக் கேரள மாநில முதலமைச்சர் 

பினராயி விஜயன், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட சக நடிகர்கள் என இந்திய சினிமா உலகமே இரங்கல் தெரிவித்து வருகிறது.

நடிகர் இன்னசென்ட் 2012ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதித்து அதிலிருந்து மீண்டுவந்தார். தனது அனுபவம் குறித்து புத்தகம் ஒன்றையும் இவர் எழுதினார்.

இந்த புத்தகம் புற்றுநோயால் பாதித்தவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வருகிறது. தற்போது மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .