2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

சமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பொஸ் நட்சத்திரம்

Ilango Bharathy   / 2021 ஜூலை 25 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்குத் திரையுலகில் சிறந்த  நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. இயக்குனரும், நடிகருமான இவர் தற்போது கைவசம்  'ஆர்.ஆர்.ஆர்', 'இந்தியன் 2', 'தலைவி', 'எம்.ஜி.ஆர் மகன்', 'அந்தகன்', 'டான்', 'ரைட்டர்' என  ஏராளமான படங்கள் உள்ளன. 

இந்நிலையில், அவர் நடிக்கும் மற்றொரு தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு 'யாவரும் வல்லவரே' என பெயரிபடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படம், நான்கு வெவ்வேறு கதைகளை இணைத்துச் சொல்லும் வித்தியாசமான படமாக இது உருவாகியுள்ளது.

இப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பிக்பொஸ் பிரபலம் ரித்விகா நடித்துள்ளார்.மேலும் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .