2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

கவர்ச்சியை அள்ளித் தெளித்த பிரியங்கா சோப்ரா

Editorial   / 2021 ஜூலை 11 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார் பிரியங்கா.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் சினிமா பிரபலங்களில் இவரும் ஒருவர். அவ்வப்போது தன்னைப் பற்றிய ஏதாவது அப்டேட் ஒன்றை வெளியிட்டுக் கொண்டேயிருப்பார்.

நேற்று அசத்தலான கவர்ச்சி ஆடையுடன் சில படங்களைப் பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் உள்ள இளைஞர்களை வசீகரித்திருக்கிறார். அந்தப் படங்களுக்கு மட்டும் 28 இலட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்கள் கிடைத்துள்ளன.

அப்படி லைக்குகளை அள்ளித் தெளித்தவர்கள் ரசிகர்கள் மட்டுமல்ல, பாலிவுட் சினிமா பிரபலங்களும் தான். திருமணமான பின்னும் இப்படி கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளித் தெளிக்கிறாரே என பாலிவுட் இளம் நடிகைகள் கோவத்துடன் தான் இருப்பார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .