2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

விஸ்வநாதன் ஆனந்தாக பிரபல நடிகர்

Ilango Bharathy   / 2021 ஜூன் 16 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் கொரோனாத் தொற்றுப்பரவலானது தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் ‘செஸ் மேட் கொவிட்‘ என்ற  நிகழ்ச்சி அண்மையில் நடத்தப்பட்டது.

இதில் பிரபல பொலிவூட் நடிகர் ஆமிர் கான் கலந்துகொண்டு இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக செஸ் விளையாடினார்.

அப்போது நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது பேசிய ஆமிர் கான், விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுவதாக கூறினார். 

ஏற்கனவே, விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கை படமாக்கும் பணியில் பிரபல பொலிவூட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இறங்கியுள்ளார்.

இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஸ்வநாதன் ஆனந்தாக  நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது நடிகர் ஆமிர் கான் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதால், அவரே இதில் நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .