2022 ஜனவரி 20, வியாழக்கிழமை

சமந்தாவின் அடுத்த நகர்வு

Freelancer   / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா, அடுத்ததாக ரொமாண்டி பேண்டஸி படத்தில் நடிக்க இருக்கிறார்.

முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து நடித்தவர் சமந்தா. 

தற்போது விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்து வரும் அவர், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், இப்படத்தை அறிமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கும் ரொமாண்டிக் பேண்டஸி வகையில் உருவாகவுள்ள படத்தில் சமந்தா நடிக்க இருக்கிறார். 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளதுடன், இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X