2022 ஜூலை 07, வியாழக்கிழமை

பழம்பெரும் நடிகர் விஜூ கோட்டே காலமானார்

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷோலே திரைப்படத்தில் காளியா கதாப்பாத்திரத்தில் நடித்த பழம்பெரும் நடிகரான விஜூ கோட்டே மும்பையில் காலமானார்.

77 வயதான விஜூ கோட்டே 1964 ஆம் ஆண்டில் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். 300க்கும் மேற்பட்ட ஹிந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்துள்ள அவர், ஷோலே திரைப்படத்தில் காளியா கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

கயாமத் சே கயாமத் டக் , வெண்டிலேட்டர், கித்னே ஆத் மே, டு சர்கார் ஆகியவை விஜூ கோட்டே நடித்த திரைப்படங்களில் நல்ல வரவேற்பை பெற்றன.

அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜூ கோட்டேவுக்கு பல்வேறு உறுப்புகள் செயல் இழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை மும்பையில் உள்ள அவரது வீட்டில், உறக்கத்திலேயே விஜூ கோட்டேவின் உயிர் பிரிந்தது.

வைத்தியசாலையில் உயிரிழப்பதை விஜூ கோட்டே விரும்பாத காரணத்தால் தான் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .