2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

Ilango Bharathy   / 2021 ஜூலை 26 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பழம்பெரும் நடிகை ஜெயந்தி.

மறைந்த மூத்த நடிகர்களான  ‘நாகேஷ்,ஜெமினி கணேசன், எம்ஜிஆர் உட்பட பல நடிகர்களுடன் நடித்த  இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது சிறந்த நடிப்பாற்றலால் பல முறை கர்நாடக மாநில விருதுகளை வென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவர் இன்று(26) காலை தனது 76 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

இதையடுத்து திரையுலகினரும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .