Ilango Bharathy / 2021 ஜூலை 08 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘இளைய தளபதி‘ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவருக்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

குறிப்பாக இளைஞர்களைக் கடந்து இக்கால சிறுவர்களும் விஜய்யைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் காயமடைந்து வலியால் துடித்த சிறுவனை சமாதானப்படுத்துவதற்காக அவருக்கு பிடித்தமான நடிகர் விஜயின் பிகில் படத்தை காண்பித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சசிவர்ஷன் என்ற 10 வயதுச் சிறுவனே இவ்வாறு தன்னுடைய மாமாவுடன் கடந்த செவ்வாயன்று மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்துக்குள்ளாகியுள்ளான்.
இவ்விபத்தில் பலத்த காயத்துக்குள்ளான சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது அவனது நெற்றியில் தையல் போட மருத்துவர்கள் முடிவு செய்து முதலில் ஊசி போட முயன்றனர்.
ஆனால் பயத்தில் அவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளான். எவ்வளவு முயன்றும் மருத்துவர்களின் சிகிச்சைக்கு அவன் ஒத்துவராததால் அவனை சமாதானப்படுத்தும் முயற்சியில் சிறுவனுக்குப் பிடத்த விஜய்யின் திரைப்படமொன்றை தொலைபேசியில் காண்பித்துள்ளனர்.

இதனால் வலியை மறந்த சிறுவன் மெய் மறந்து பிகில் படம் பார்த்துக்கொண்டிருந்த போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
இச்சம்பவமானது விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
42 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025