2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

விபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்; தோழி உயிரிழப்பு

Ilango Bharathy   / 2021 ஜூலை 25 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். `இருட்டு அறைக்குள் முரட்டுக் குத்து` என்ற படத்தின் மூலமாகப்  பிரபலமான இவர்,  நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் சீசன் 2இல் போட்டியாளராகக் கலந்துகொண்டு  தனக்கென ஓர்  ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று இரவு யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் பயணம் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்த்தின் கார் மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அவருடன் பயணித்த தோழி வள்ளிச்செட்டி பவணி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

 மேலும் இரண்டு நண்பர்கள் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .