2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான பிக்பொஸ்-3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.

இவர் பிக்பொஸ் வீட்டு வெளியே வந்த காலத்திலிருந்து பல சர்ச்சையான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார். குறிப்பாக பிக்பொஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்றிருந்த இயக்குனர் சேரனைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டார்.அதன்பின்னர்  விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் மனைவிகளைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டு அவர்களது ரசிகர்களின் வெறுப்பை எதிர்கொண்டார். இந்நிலையில் தற்போது ‘தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பற்றி அவதூறாகப் பேசி வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,” தாழ்த்தப்பட்ட  சமூகத்தினர் மோசமான குற்றச்செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா தவறான வேலைகளையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த வீடியோவானது  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதை அடுத்து  வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .