2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

நயன்தாரா- விக்னேஷ் குழந்தைகளின் பெயர்கள் இதோ…

Freelancer   / 2023 ஏப்ரல் 03 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நயன்தாரா விக்னேஷ் சிவன்  இருவரும் நான்கு மாதங்களிலே வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து ஷாக்கை கொடுத்தனர். இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினாலும் குழந்தைகள் பிறந்த பிறகு புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில் தங்களது மகன்களுடன் சேர்ந்து சோஷியல் மீடியாக்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவர்கள் தங்களின் இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ளனர். இதுவரை தங்களது குழந்தைகளை உயிர் - உலகம் என குறிப்பிட்டு வந்த நிலையில் தற்போது இரட்டை குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயரை அறிவித்துள்ளனர்.

அதன்படி ஒரு மகனுக்கு 'உயிர் ருத்ரேனில் என் சிவன்' என்றும் மற்றொரு குழந்தைக்கு 'உலக தெய்வக் என் சிவன்' என்றும் பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து பலரும் நயன் - விக்கி தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X