2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

நயன்தாரா பாணியில் ப்ரியா

J.A. George   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகியோர் தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இளம் நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் முதல்முறையாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நயன்தாரா நடித்த ‘ஐரா’என்ற திரைப்படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இவர் ஒரு தொலைக்காட்சி செய்தியாளராக நடிக்கிறார் என்றும் ஒரு கொலையை அவர் துப்பறிவது தான் இந்த  திரைப்படத்தின் கதை என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த இர்பான் மாலிக் என்பவர் தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .