2021 செப்டெம்பர் 25, சனிக்கிழமை

நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலில் விரிசல்?

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நயன்தாரா இயக்குநர்  விக்னேஷ் சிவனை உருகி உருகி காதலித்து வருகிறார்.

அடிக்கடி வெளிநாடுகளுக்கு விசிட் அடிக்கும் இந்த ஜோடி, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். 

அப்படி அண்மையி்ல மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் நயன்தாராவுடன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தார்   விக்னேஷ் சிவன். 

அதேபோல்  கிறிஸ்துமஸ் பண்டிகையையும் இருவரும் ஒன்றாக கொண்டாடினர்.  இருப்பினும் புத்தாண்டு நிகழ்வில் நயன்தாரா புகைப்படம் மட்டுமே வெளியானது. 

தொலைக்காட்சி நடத்திய விருது விழாவிலும் நயன்தாரா மட்டுமே கலந்து கொண்டார்.

இதனால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றும்  நயன்தாரா மீதான மனக்கசப்பால் விக்னேஷ் சிவன் வரவில்லை என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இந்த தகவல்கள் இது முற்றிலும் பொய் என்றும் நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் உடனிருந்ததாகவும், அந்த புகைப்படத்தை எடுத்ததே விக்னேஷ் சிவன் தான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .