2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பட்டதாரி நடிகைகள்

J.A. George   / 2021 ஜூலை 20 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலக பிரபல நடிகைகள் பலரும் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆக உள்ளனர் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி கணினி பொறியியலாளர். அவர் பட்டதாரி படிப்பை மவுண்ட் கார்மல் கல்லூரியில் முடித்துள்ளார்.

அதேபோல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ளார். தமிழ் தெலுங்கு மலையாள திரையுலகின் நடிகைகளில் ஒருவரான சாய் பல்லவி ஒரு எம்பிபிஎஸ் டாக்டர் ஆவார்.

பிரபல நடிகைகளில் ஒருவரான சமந்தா, காமர்ஸ் படைப்பில் பட்டதாரி. இவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தான் பட்டப்படிப்பை முடித்தார்.

அதேபோல் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, உளவியல்,  ஊடகவியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் பட்டதாரி படிப்பை முடித்துள்ளார்.

அதேபோல் இன்னொரு பிரபல நடிகையான காஜல் அகர்வால் முதுநிலை பட்டதாரி. இவர் மாஸ் மீடியா பட்டதாரி படிப்பை முடித்துவிட்டு அதன்பின் மார்க்கெட்டிங் படிப்பில் எம்பிஏ முடித்து உள்ளார்.

மேலும் பிரபல நடிகை தமன்னாவும் ஒரு பட்டதாரி. மும்பையில் அவர் தனது பட்டப்படிப்பை முடித்து உள்ளார். அத்துடன், நடிகை ஸ்ருதிஹாசன் உளவியல் பட்டம் பெற்றவர்.

இதேநேரம், நடிகை ஸ்ரேயா சரண் டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .