2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

வாழ்த்து மழையில் சமந்தா

Freelancer   / 2023 பெப்ரவரி 27 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா சில தினங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருந்தார்.

சிகிச்சை பெற்று வந்ததால் சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். சமந்தா நடிப்பில் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், சமந்தா சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது 13 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். தமிழில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்தப் படம் கடந்த 2010 ஆண்டு பெப்ரவரி 26 வெளியானது. இந்நிலையில் சமந்தா தன்னுடைய 13 ஆண்டுகால திரைப்பயணத்தை பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் சமந்தாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த அன்பை நான் உணர்கிறேன்... இதுதான் என்னை தொடர வைக்கிறது... இப்போதும் என்றும், நான் என்னவாக இருக்கிறேன் என்பது உங்களால் தான். 13 ஆண்டுகள், நாம் இப்போதுதான் தொடங்குகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .