2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

“காசேதான் கடவுளடா” படம் ரீமேக் ஆகிறது

Freelancer   / 2021 ஜூலை 08 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்ராலயா கோபு இயக்கிய “காசேதான் கடவுளடா” படம் ரீமேக் ஆக உள்ளது.

இந்த  படத்தின் ரீமேக்கை ஆர்.கண்ணன் இயக்குகிறார்.

இந்த படம் 1972-ல் திரைக்கு வந்தது.

இத் திரைப்படத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஶ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, லட்சுமி, மனோரமா நடித்து இருந்தனர்.

இதில் முத்துராமன் கதாபாத்திரத்தில் சிவா, தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் யோகிபாபு, மனோரமாவாக ஊர்வசி நடிக்கின்றனர்.

படத்தில் இடம்பெற்ற ஜம்புலிங்கமே ஜடாதரா…, மெல்ல பேசுங்கள்…, அவள் என்ன நினைத்தாள்…, இன்று வந்த இந்த மயக்கம்…, ஆண்டவன் தொடங்கி… போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

படம் குறித்து ஆர்.கண்ணன் கூறும்போது, கொரோனா தொற்றால் மக்கள் மன அழுத்தத்தில் இருக்கும் இந்த காலத்தில் ஓ.டி.டி. தளங்களில் அதிகமாக மர்மம், திகில், கிரைம் படங்களே வருகின்றன.

மக்களை சிரிக்க வைக்கும் படைப்பாக காசேதான் கடவுளடா படத்தை நவீன காலத்துக்கு ஏற்ப ரீமேக் செய்கிறோம். காசேதான் கடவுளடா படம் எக்காலத்துக்கும் பொருந்தும் கதையமைப்பை கொண்டது’’ என்றார்.

M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .