2022 ஜூலை 07, வியாழக்கிழமை

இசையில் மிரட்டும் ’இரவின் நிழல்’

J.A. George   / 2022 மே 03 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பார்த்திபன் நடித்து இயக்கிய ‘இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

உலகின் முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்ற ‘இரவின் நிழல்’திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த விழாவில் பார்த்திபன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட திரைப்படக்குழுவினர் கலந்துகொண்டு டீசரை வெளியிட்டு உள்ளனர்.

இந்த டீசரின் ஆரம்பத்தில் பார்த்திபன் தன்னுடன் 5 நபர்களை அறிமுகப்படுத்தி அந்த 5 பேரும் நானே என்று கூறியுள்ள முதல் காட்சியே வித்தியாசமாக உள்ளது.

மேலும் ஒன்றரை நிமிடடீசரில் உலகத்தரத்திலான மிரட்டும் காட்சிகள், இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் அபார பின்னணி இசை ஆகியவை இந்தத் திரைப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகின்றது.

பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், உள்பட பலர் நடிக்க ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை வெளியீட்டு விழா ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .