Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 18 , மு.ப. 01:11 - 1 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் தனுஷும் அவரது மனைவி மற்றும் ரஜினிகாந்தியின் மகளுமான ஐஸ்ர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இதுவரும் அவரவர் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை கையெழுத்து போடும் பகுதியில் பெயரையும் அதற்கு முன்பாக சில வார்த்தைகளை மட்டும் மாற்றிக் கொண்டு வெளியிட்டுள்ளனர்.
பிரபல இயக்குனரான கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஐஸ்வர்யா பல படங்களை இயக்கம் செய்தும் வருகிறார். கோலிவுட், போலிவுட், ஹோலிவுட் என பல படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். சமீபத்தில் கர்ணன் படத்திற்காக இவர் தேசிய விருது பெற்றார்.
தனுஷ் தற்போது ரஜினி வீட்டிற்கு அருகே போயஸ் கார்டனில் மிக பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். விரைவில் இந்த வீட்டிற்கு கிரஹபிரவேசம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கும் யாரும் எதிர்பாராத விதமாக தனது மனைவியை பிரிய போவதாக தனுஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதே தகவலை ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களின் இந்த திடீர் பிரிவுக்கு என்ன காரணமாக இருக்கும் என பலரும் கேட்டு வருகின்றனர்.
தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்," 18 ஆண்டுகளாக நண்பர்கள், தம்பதி, பெற்றோர், நலம் விரும்பிகளாக இருவரும் இருந்தோம். இந்த பயணம் விட்டுக்கொடுத்தல், புரிதல், ஏற்றுக்கொள்ளல் என வளர்ந்தது. இன்று இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். ஐஸ்வர்யாவும் நானும் தம்பதிகளாக இருப்பதில் இருந்து பிரிவதாக முடிவு செய்துள்ளோம்.
எங்களின் முடிவை மதித்து, எங்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின முதல் திருமணமும் தோல்வி அடைந்தது. இதே போன்ற பிரச்சனைகளை அவரும் சந்தித்தார்.
முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற செளந்தர்யாவிற்கு சமீபத்தில் வசீகரனுடன் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது. தற்போது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனது கணவர் தனுஷை பிரிய உள்ளதால் ரஜினி குடும்பத்தினர் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.
59 minute ago
2 hours ago
2 hours ago
நக்கீரன் Tuesday, 18 January 2022 10:36 PM
செல்வம் ஒன்று மட்டும் இருந்தால் திருமண வாழ்க்கை வெற்றிபெறும் என்பது பொய்த்திருக்கிறது. ஏழைப் பெண்கள் கல்லானாலும் கணவன் புல்லானாலும் கணவன் என்ற மனப் பக்குவத்தோடு வாழ்கிறார்கள். பணக்காரக் குடும்பங்களில் அந்த மனப் பக்குவம் இல்லை. எனவே விட்டுக் கொடுப்பு இல்லை. பெரிய விட்டுப் பிள்ளைகளது திருமணமுறிவுக்கு இதுவே காரணம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago