2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

வடிவேலுவுக்கு முதலிடம்

J.A. George   / 2022 நவம்பர் 29 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பரியேறும் பெருமாள், கர்ணன்' திரைப்படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகர் பகத் பாசில், நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறன. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு 'மாமன்னன்' படக்கழு ஏஆர் ரஹ்மானின் வாழ்த்து வீடியோவுடன் படத்தின் சிறு முன்னோட்டம் ஒன்றை வெளியிட்டது.

அந்த வீடியோவின் இறுதியில் திரைப்படத்தின் நட்சத்திரங்கள், டெக்னீஷியன் அடங்கிய போஸ்டரில் வடிவேலு பெயரைத்தான் முதலில் போட்டிருக்கிறார்கள். அவருக்கு அடுத்து பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் பெயர்களைப் போட்டுவிட்டு கடைசியாகத்தான் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பொதுவாக எந்த ஒரு திரைப்படத்தின் தலைப்பு சம்பந்தப்பட்ட போஸ்டர்களிலும் கதாநாயகன் பெயரைத்தான் முதலில் போடுவார்கள். அப்படியிருக்க இந்தப் படத்தின் போஸ்டரில் அவருடைய பெயரைக் கடைசியில் போட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .