Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஜனவரி 29 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது வசீகரமான உடலை வெளிச்சம்போட்டு காட்டி ரசிகர்களின் மொத்த மொத்தப் பார்வையும் தன் பக்கம் திருப்பு உள்ளார் ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர்.
அழகான கண்கள் வசீகரிக்கும் அழகு கொண்ட ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்தார்.
எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை கனகச்சிதமாக செய்து அசத்துவதில் ஸ்ரீ தேவி தான் பெஸ்ட் என பெயர் எடுத்திருந்தார். போனிக்கபூரை திருமணம் செய்து கொண்டு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி, 2008ம் ஆண்டு உயிரிழந்தார்.
ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு அவரது மகள் ஜான்வி கபூர், டக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.
ஸ்ரீதேவியின் மகள் என்பதால் சினிமாவில் நுழைய பெரிதாக எந்த ஒரு சிக்கல்களும் இல்லாமல் சுலபமாக நுழைந்தார்.இவர் நடித்தது ஒரு சில படங்களே என்றாலும், ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.
இவர் நடித்த குன்ஜன் சக்சேனா தி கார்கில் கேள் என்ற படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி இந்தியா முழுவதும் ஜான்வி கபூர் பிரபலமான நடிகையாக மாற்றியது. மலையாளத்திலிருந்து ஹெலன் மற்றும் தமிழிலிருந்து கோலமாவு கோகிலா ஆகிய படங்களின் ரீமேக்குகளில் இவர் நடித்துள்ளார். இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களை இவருக்கு பெற்று தந்துள்ளன.
அம்மாவைப்போல அழகும்,வசீகரமான கண்களை கொண்ட ஜான்வி கபூரை, தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் கொண்ட ஜான்வி, சிறந்த கதைக்களத்திற்காக காத்திருக்கிறார். மேலும், நடிகை ஜான்வி, விக்னேஷ் சிவன் இயக்கிய விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் 100 முறை பார்த்தாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது படுகவர்ச்சியாக இருக்கும் போட்டோவை அப்லோடு செய்து வருகிறார். சமீபத்தில் கேரள பாரம்பரிய புடவையில் தண்ணீருக்கும் இருந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். அதே போல, தற்போது, அழகான சேலையில், தனது சிறுத்த இடைதெரிய ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
50 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago