Freelancer / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் படத்தில் ராஜா கண்ணுவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மணிகண்டன். அவர் ஒரு நல்ல நடிகர் மட்டும் அல்ல திரைக்கதை எழுத்தாளரும் கூட. இயக்குநரும் ஆவார்.
அப்பொழுது தான் உலக நாயகன் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்றார். நான் ஒரு கமல் ரசிகன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவ்வப்போது கூறி வருகிறார். லோகேஷ் அப்படி சொல்லும்போது அவரை அடிக்க வேண்டும் போன்று இருக்கிறது என்றார்.
மணிகண்டன் பேசியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே கேமராவை லோகேஷ் கனகராஜ் பக்கம் திருப்பினார்கள். அவரோ எந்த ரியாக்ஷனையும் முகத்தில் காட்டாமல் அமைதியாக இருந்தார்.
பின்னர் மேடைக்கு வந்த லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, எத்தனை மணி வந்தாலும் சரி நான் தான் கமல் சாரின் முதல் ரசிகன். அந்த விஷயத்தில் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார்.
கமலின் ரசிகன் யார் என்பதற்கு இப்படியொரு போட்டியா?. மணிகண்டன் கமல் ஹாசனின் ரசிகன். லோகேஷ் கனகராஜ் கமலின் ரசிகன் இல்லை வெறியன் என்கிறார்கள் ரசிகர்கள்.

59 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
3 hours ago