2022 ஜூலை 07, வியாழக்கிழமை

அவதார் டிரைலர்: அதிர்ச்சியில் படக்குழு

J.A. George   / 2022 மே 03 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகமே எதிர்பார்த்து காண துடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் இரண்டாம் பாகம். இதற்கு 'அவதார் : தி வே ஒப் வோட்டர்' என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் எதிர்வரும் டிசெம்பர் 16ஆம் திகதி உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், எதிர்வரும் 6ஆம் திகதி அவதார்-2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒட்டுமொத்த டிரைலரும் இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், லீக்கான டிரைலரை உடனடியாக தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி தங்களது சைபர் குழுவை வைத்து அத்தனை வீடியோக்களையும் அதிரடியாக நீக்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .