2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

’பாரீஸ் பாரீஸ்’ ரிலீஸ் எப்போது? ‘எனக்கே தெரியாது’

J.A. George   / 2021 ஜூலை 20 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவுட் திரையுலகில் கங்கனா ரனாவத் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ’குயின்’. இந்த திரைப்படம் தமிழிலும் ’பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கங்கனா ரனாவத் கேரக்டரில் நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து கடந்த 2018ஆம் ஆண்டு வெளியீட்டுக்கு தயாரானது. ஆனால் சென்சார் உள்பட ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில் நடிகை காஜல்அகர்வால் இந்தத் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து கேட்டபோது ’பாரிஸ் பாரிஸ்’ திரைப்படம் எப்போது ரிலீசாகும் என்று எனக்கே தெரியாது என்று கூறியுள்ளார்.

எனினும், இந்தத் திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .