2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

செல்பி எடுக்க வந்த ரசிகருக்கு அஜித் சொன்ன அறிவுரை

J.A. George   / 2021 ஏப்ரல் 06 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழக வாக்காள பெருமக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய காலை முதலாகவே வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் உட்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

வாக்குச்சாவடி மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை இராணுவ படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்குகளை பதிவு செய்தார். 

இதன்போது, ரசிகர் ஒருவர் நடிகர் அஜித்தை கண்டதும் அவருடன் செல்பி எடுக்க முயற்சித்தார்.

நடிகர் அஜித் சுதாரித்து, " இங்கு வாக்களிக்க வந்துள்ளோம். இந்த இடத்தில் என்னுடன் செல்பி தேவையா?. உங்களின் உரிமையை, கடமையை முதலில் நிறைவேற்றுங்கள் " என்று அவரிடம் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .