2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

ஹன்சிகாவின் விருந்து

J.A. George   / 2022 நவம்பர் 29 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. இந்நிலையில் தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கத்துரியா என்பவரை வரும் டிசெம்பர் 4ம் திகதி ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் மணக்க உள்ளார்.

இந்த நிலையில், திருமணத்திற்கு முன்னதாக தனது நெருங்கிய தோழிகளுக்கு 'பேச்சுலர்' பார்ட்டி ஒன்றை வழங்கியுள்ளார் ஹன்சிகா.

அது குறித்த வீடியோவை 'என்றென்றைக்கும் மிகச் சிறந்த பேச்சுலரேட்… சிறந்தவர்களின் வாழ்த்துகளுடன்,” என்று பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, தனது திருமணத்திற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் யார் யாரை ஹன்சிகா அழைத்துள்ளார் என்பது தெரியவில்லை. அவர்களை நேரில் சந்தித்து பத்திரிகை கொடுத்து அழைத்ததாக எந்த தகவலுமில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .