2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

சிம்புவுடன் மோதும் விக்ரம்?

Ilango Bharathy   / 2021 ஜூன் 24 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப் படத்தினை வரும் ஒக்டோபர் மாதம் ஆயுத பூஜை தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே ஆயுத பூஜை தினத்தில்  ‘விக்ரம் 60” படத்தையும் வெளியிடப் படக்குழுவினரும் திட்டமிட்டுள்ளதால்  ‘மாநாடு’ மற்றும் ‘விக்ரம் 60’ திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகுமா ஆகுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

‘விக்ரம் 60’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூலை முதல் வாரம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் மீதி படப்பிடிப்பை ஒரு மாதங்களில் முடித்து விட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கவுள்ளதாகவும்  தகவல்கள் வெளிவந்துள்ளன.

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் இணைந்து நடித்து வரும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் என்பதும், இப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .