Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 மே 31 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரும், டி.வி. நடிகை மஹாலட்சுமியும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமண புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலானதும் ஜோடி பொருத்தம் பற்றி சிலர் கேலி செய்தார்கள்.
சமீபத்தில் ரவீந்தர் சந்திரசேகர் தனியாக இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு அதில், "வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே. ஏனெனில் அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்'' என்ற சோகமான பதிவையும் பகிர்ந்தார்.
அதை பார்த்த ரசிகர்கள் ரவீந்தர் சந்திரசேகருக்கும், நடிகை மகாலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என்றும், இருவரும் விவாகரத்து செய்து பிரியப்போகிறார்கள் என்றும் வலைத்தளத்தில் பேசினர். இது பரபரப்பானது..
ஆனால் நடிகை மகாலட்சுமி இதனை மறுத்துள்ளார். அவர் ரவீந்தர் சந்திரசேகருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில், "புருஷா...இன்ஸ்டாகிராமில் தனி புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது. நாம் பிரிந்து விட்டோம் என்று அத்தனை சமூக வலைத்தளங்களும் பேசுகின்றன. மீண்டும் இந்த தவறை செய்ய வேண்டாம். யூடியூப் சேனல்களுக்கு எனது மைண்ட் வாய்ஸ். இன்னுமா நாங்க டிரெண்டு. இதுக்கு இல்லையா ஒரு எண்டு. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்'' என்று பதிவிட்டு உள்ளார்.
5 minute ago
10 minute ago
29 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
29 minute ago
56 minute ago