2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு

Ilango Bharathy   / 2021 ஜூன் 15 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தையும் கொரோனாத் தொற்றுப்பரவலானது ஆட்டம் காண வைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சரைநேரில் சந்தித்தும், ஒன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

குறிப்பாக   நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபா 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் என ஏராளமான திரைப்பிரபலங்கள் நிதியுதவி வழங்கி இருந்தனர். 

இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனாத் தொற்று தடுப்பு பணிகளுக்காக  25 லட்சம் ரூபாவை  வழங்கியுள்ளார்.

விஜய் சேதுபதியின் இச் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .